
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் கிழக்குப் பகுதியில், பஞ்சாப் மற்றும் பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பிரதேசம் இணையும் பகுதியில் mangla அணைக்கட்டுச் அமைந்துள்ளது. பாசனம் மற்றும் நீர் மின்னாற்றல் உற்பத்திக்காக, 1967ம் ஆண்டில், இந்த அணை கட்டியமைக்கப்பட்டது. காலம் செல்ல, இந்த அணைக் கட்டின் நீர் சேமிப்பு ஆற்றல் 20 விழுகாடு குறைந்து, நீர் மின்னாற்றல் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
2004ம் ஆண்டு, சீன changjiang sanxia குழுமத்தின் கிளை நிறுவனம் இத்திட்டப்பணிக்குப் பொறுப்பேற்கத் துவங்கியது. இத்திட்டப்பணிக்கான செலவு 24 கோடி அமெரிக்க டாலராகும். இதன் மூலம், இவ்வணைக் கட்டின் உயரம் சுமார் 10 மீட்டர் அதிகரித்துள்ளது என்று இத்திட்டப்பணிக்கான நிர்வாக அலுவலகத்தின் தலைவர் liyunxiang தெரிவித்தார். அவர் கூறியதாவது
உயரம் அதிகரித்த பின், இந்த அணைக்கட்டின் பாசன ஆற்றல் சுமார் 60 விழுகாடு அதிகரித்துள்ளது. அது மட்டுமல்ல, வெள்ளப் பெருக்குத் தடுப்பு ஆற்றலையும் இந்த அணைக்கட்டு கொள்கின்றது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை, இத்திட்டப்பணி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று பாகிஸ்தான் தலைமையமைச்சர் கிலானி தெரிவித்தார். அவர் கூறியதாவது
இத்திட்டப்பணியில் முக்கிய பங்காற்றியுள்ள சீனத் தொழில் நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கின்றேன். இத்திட்டப்பணி, பாகிஸ்தானின் நீர் மற்றும் மின்சார வளர்ச்சி ஆணையத்தின் முக்கிய பகுதியாகும். பசுமையான பாகிஸ்தானை உருவாக்குவதில் இது முக்கிய பங்கெடுத்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது என்று அவர் தெரிவித்தார். இனிமேலும், பாகிஸ்தானின் தூய்மையான எரியாற்றல் முதலீட்டுத் திட்டப்பணியில் தொடர்ந்து பங்கெடுத்து, உள்ளூர் மக்களுக்கு நன்மை பயக்க சீன changjiang sanxia குழுமம் முயற்சிகளை மேற்கொள்ளும் என்று இக்குழுமத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.