திபெத் பெளத்த கழகம் நிறுவப்பட்டதை கொண்டாடும் விழா, 20ம் நாள் லாசா நகரில் நடைபெற்றது. அதற்கு, சீன பெளத்த சங்கத்தின் துணைத் தலைவர் Qoigyi Gyaibo வாழ்த்து கடிதம் அனுப்பினார்.
திபெத் பெளத்த கழகத்திற்கு 9 கோடியே 93 இலட்சத்து 30 ஆயிரம் யுவான் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. சீன பெளத்த சங்கத்தின் திபெத் பிரதேச தலைவர் Tudeng Kezhu, திபெத் பெளத்த கழகத்தின் தலைவராக பதவி ஏற்கின்றார். இப்போது, இந்த கழகத்தில் 13 ஆசிரியர்கள் உள்ளனர். அவர்கள், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பல்வேறு கோயில்களைச் சேர்ந்த மூத்த பெளத்த துறவியராவர்.