அனைத்து இந்திய வானொலி நிலையத்தில் தொடர்புடைய பொறுப்பாளர்களுடன் அவர் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினார். வானொலி ஒலிபரப்பு எதிர்நோக்கும் அறைக்கூவல் மற்றும் வளர்ச்சிப் போக்கு, அவற்றைச் சமாளிக்கும் வழிமுறைகள் முதலியவை பற்றி இரு தரப்பினரும் விவாதித்து, எதிர்கால ஒத்துழைப்பு குறித்தும் கலந்தாலோசித்தனர்.
இந்திய ஆசியச் செய்தி நிறுவனம் சீன வானொலியின் ஒத்துழைப்புக் கூட்டாளிகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 2010 சீனாவின் தலைசிறந்த நகர்களின் பெயர்ப் பட்டியல், 2011 வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களின் சீனப் பயணம் முதலிய சீன வானொலி ஏற்பாடு செய்த நடவடிக்கைகளில் இது ஆக்கமுடன் பங்கெடுத்தது.