திபெத்தை உலகில் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகக் கட்டியமைக்க சீனா முயல்கின்றது. இது பற்றி சீனத் தேசிய சுற்றுலா ஆணையமும் திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசும் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளன.
உடன்படிக்கையின் படி, திபெத்தின் சுற்றுலாத் துறை கட்டுமானம் மற்றும் பரப்புரைக்கு சீனத் தேசிய சுற்றலா ஆணையம் பெரும் ஆதரவு வழங்கும்.
திபெத்தின் சுற்றுலா வளங்கள் செல்வமானவை, தனிச்சிறப்புடையவை. உலகில் முக்கிய சுற்றுலாத் தளமாக மாறுவது திண்ணம் என்று இவ்வாணையத்தின் தலைவர் சாவு ச்சிவே கூறினார்.
12வது ஐந்தாண்டு திட்டத்தின் போது, சுற்றுலாத் துறையிலான ஒதுக்கீட்டை திபெத் அரசு அதிகரித்து, இத்துறையை பொருளாதார வளர்ச்சியின் ஆதாரத்தூணாக வளர்க்கும் என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைவர் Padma Trinley தெரிவித்தார்.