2010ஆம் ஆண்டு குளிர்கால திபெத் பயண நடவடிக்கை 10இலட்சத்துக்கு மேலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளைக் கவர்ந்திழுத்தது.
இவ்வாண்டின் குளிர்கால திபெத் பயண நடவடிக்கைக்கு திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுற்றுலா வாரியம் 7 சிறப்பு நெறிகளை வெளியிட்டுள்ளது.
குளிர்காலத்திலும் திபெத் இனிமையாகவும் வெப்பமாகவும் இருக்கிறது. மிகக் குளிர்ச்சியாக இருக்கின்ற நேரத்தில், லாசாவில் பகல் தட்ப வெப்ப நிலை 10 முதல் 15திகிரி செல்சியஸ் வரை, இருக்கிறது. அதனால் லாசா உலகில் மிகப் புகழ் பெற்ற வெயில் நகரம் என அழைக்கப்படுகிறது.