ஆக்கத் தொழில் துறையைப் பெரிதும் வளர்க்கும் வகையில், இந்தியாவின் முதலாவது தேசிய ஆக்கத் தொழில் கொள்கையை இந்திய அமைச்சரவை ஆக்கமுடன் ஏற்றுக்கொண்டது என்று இந்திய அமைச்சரவை 25ம் நாள் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியது.
இக்கொள்கையின் படி, 2022ம் ஆண்டிற்குள், மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பில் ஆக்கத் தொழில் துறையின் பங்கு, 16 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காட்டுக்கு உயரும். அதனால், 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
முதற்காட்டமாக, 7 தேசிய அளவு முதலீட்டு மற்றும் ஆக்கத் தொழில் துறை மண்டலத்தை இந்திய அரசு கட்டியமைக்கும் என்று இந்திய வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சர் Anand Sharma தெரிவித்தார்.