
1971ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் நாள், 26வது ஐ.நா. பொதுப் பேரவையில் 2758வது தீர்மானம் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதாவது, ஐ.நாவில் சீன மக்கள் குடியரசின் சட்டப்படியான இடம் மீட்கப்பட்டது. இது, கடந்த நூற்றாண்டின் சர்வதேச உறவு வரலாற்றில் குறிப்பிட்ட காலகட்ட முக்கியத்துவ மிகு நிகழ்வாகும் என்று உபசரிப்புக் கூட்டத்தில் தைபிங்குவோ கூறினார்.
உலகில் மிகப் பெரிய வளரும் நாடாகவும், ஐ.நா. பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடாகவும், கடந்த 40 ஆண்டுகளில், ஐ.நா. சாசனத்தின் நோக்கம் மற்றும் கோட்பாட்டை சீனா நடைமுறைப்படுத்தி, உலகின் பல்வேறு நாடுகளிடையில் சுமுக சகவாழ்வை முன்னேற்றி வருகிறது. உலக அமைதியைப் பேணிக்காப்பது, கூட்டு வளர்ச்சியை தூண்டுவது, சர்வதேச ஒத்துழைப்பை முன்னேற்றுவது ஆகியவற்றில் சீனா மேற்கொண்ட மாபெரும் முயற்சிகளும் அர்ப்பணிப்பும் ஐ.நாவின் வெகுவான பாராட்டுகளைப் பெற்றுள்ளன. ஐ.நா. தலைமைச் செயலாளர் பான்கிமூனின் சார்பில் ஐ.நா. துணைத் தலைமைச் செயலாளரும் ஜெனீவா அலுவலகத்தின் தலைமை இயக்குநருமான Tokayev Kemelevich உபசரிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அவர் கூறியதாவது—
"பல ஆண்டுகளாக, ஐ.நாவின் உறுப்பு நாடு மற்றும் பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடாக, சீனா, ஐ.நாவில் முக்கிய பங்காற்றியுள்ளது. உலகில் மிகப் பெரிய வளரும் நாடாக, முன்கண்டிராத பொருளாதார அதிகரிப்பை சீனா நனவாக்கி, புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்கை நனவாக்குவதில் முன்கண்டிராத சாதனைகளையும் நிறைவேற்றியுள்ளது" என்று அவர் கூறினார்.
இவ்வாண்டு தொடக்கம் முதல் சர்வதேச நிலைமை கொந்தளிப்பாகவும் சிக்கலாகவும் இருக்கிறது. உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலம் கவலைப்படத்தக்கது. இயற்கைச் சீற்றங்கள், ஆப்பிரிக்கா உள்ளிட்ட பிரதேசங்களில் மனித நேய நெருக்கடியை ஏற்படுத்தின. இது பற்றிக் குறிப்பிடுகையில், இத்தகைய சவால்களை எதிர்கொண்டு, அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம், வளர்ச்சி, சமூகம், மனித நேயம் ஆகிய துறைகளில் ஐ.நா. வாய்ப்புகளை இறுகப்பற்றி, சவால்களைச் சமாளித்து, புத்துயிர் பெற வேண்டும் என்று தைபிங்குவோ சுட்டிக்காட்டினார். அவர் மேலும் கூறியதாவது—
"சீனா, அமைதியான, அறிவியல் அடிப்படையிலான, திறந்த மற்றும் கூட்டு வளர்ச்சியின் மூலம், சர்வதேச ஒத்துழைப்பை ஆக்கமுடன் விரிவாக்கி, சர்வதேச விவகாரங்களில் கலந்து கொண்டு, தனக்குரிய சர்வதேச பொறுப்பேற்று, ஐ.நாவில் செயலாக்க பங்காற்றும்" என்றார் அவர்.