சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் பிரான்ஸ் நேரப்படி நவம்பர் 2 ஆம் நாள் இரவு கானில் பிரான்ஸ் அரசுத் தலைவர் நிகோலஸ் சர்கோசியைச் சந்தித்துரையாடினார். வளர்ச்சியையும் நிதானத்தையும் உத்தரவாதம் செய்வது என்ற தெளிவான அறிகுறியைக் கான் உச்சி மாநாடு சர்வதேசச் சமூகத்துக்கு வழங்க வேண்டும் என்று ஹு சிந்தாவ் விருப்பம் தெரிவித்தார். கடன் பிரச்சினையைத் தீர்க்க ஐரோப்பாவுக்குத் திறன் உண்டு என சீனா நம்புகிறது என்றும் ஹு சிந்தாவ் வலியுறுத்தினார்.
சர்கோசி பேசுகையில், சீனாவுடன் இணைந்து ஒருங்கிணைந்த ஒத்துழைப்பை வலுப்படுத்தி, தொடர்பான பல்வேறு தரப்புகளுடன் சேர்ந்து, கான் உச்சி மாநாட்டில் ஆக்கமுள்ள சாதனைகள் பெறுவதை முன்னேற்றப் பிரான்ஸ் விரும்புகிறது என்று கூறினார்.