சீனா, பிரேசில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் 3ஆம் நாள் பிரான்ஸின் கான் நகரில் சந்திப்பு மேற்கொண்டார். பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இத்தலைவர்கள் விவாதித்தனர். தவிர, தற்போதைய உலகப் பொருளாதார நிலைமை பற்றியும், ஐரோப்பிய கடன் பிரச்சினை பற்றியும் அவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
சீன அரசுத் தலைவர் ஹூச்சிந்தாவ், பிரேசில் அரசுத் தலைவர் Dilma Rousseff அம்மையார், ரஷிய அரசுத் தலைவர் Dmitri Medvedev, இந்தியத் தலைமையமைச்சர் மன்மோகன் சிங், தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் Jacob G.Zuma ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.