முக்கிய வணிகப் பொருட்களின் விலைவாசியை நிதானப்படுத்துவது, உலகப் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதுடன் ஆகியவற்றோடு, உற்பத்தி திறனை விரிவாக்கி, விநியோகத்துக்கும் தேவைக்குமிடையிலான உறவை நிதானப்படுத்தி, நாணயச் சந்தை மீதான கண்காணிப்பை 20 நாடுகள் குழு வலுப்படுத்த வேண்டும் என்று ஹு சிந்தாவ் கூறினார்.
வேலைவாய்ப்பை நிதானப்படுத்தி விரிவாக்குவதைச் சமூக வளர்ச்சியின் முதன்மை இடத்தில் பல்வேறு நாடுகளும் வைக்க வேண்டும். வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது மக்களின் வாழ்க்கையை உத்தரவாதம் செய்து மேம்படுத்துவதின் முக்கிய கடமையாகவும், உள்நாட்டுத் தேவையை விரிவுபடுத்துவதின் முக்கிய நடவடிக்கையாகவும் கருதுவதில் சீனா ஊன்றி நிற்கிறது. ஆக்கப்பூர்வமான வேலை வாய்ப்புக் கொள்கை, உலகப் பொருளாதாரத்தின் மறுமலர்ச்சிக்கான முக்கிய அருஞ்செயலாகும் என்றும் ஹு சிந்தாவ் தெரிவித்தார்.