ஆசிய பசிபிக் பிரதேச ஒலிபரப்பு ஒன்றியத்தின் 48வது பேரவைக்கூட்டத்தின் விருது வழங்கும் விழா நவம்பர் 7ஆம் நாள் இரவு இந்திய தலைநகரான புது தில்லியில் நடைபெற்றது. சீன வானொலி நிலையம் உட்பட்ட பல சீன ஊடகங்களின் நிகழ்ச்சிகள், விருதுகள் பலவற்றைப் பெற்றன. சீன வானொலி நிலையத்தின் துணை இயக்கநர் சியா ஜி ஷுயுன் நிலையத்தின் சார்பில் விருதை பெற்றுக் கொண்டார்.
சீன வானொலி நிலையம் வழங்கிய நிழற்படத்தின் உரிமையாளரைத் தேடுதல் என்னும் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஆசிய பசிபிக் பிரதேச ஒலிபரப்பு ஒன்றியத்தின் வெளிநாட்டு ஒலிபரப்பு நிகழ்ச்சி விருது கிடைத்தது.
ஆசிய பசிபிக் பிரதேச ஒலிபரப்பு ஒன்றியம், இப்பிரதேசத்தின் மிகப் பெரிய வானொலி மற்றும் தொலைக்காட்சிச் சிறப்புத்துறை அமைப்பாகும். ஆண்டுக்கு ஒரு முறை பேரவைக்கூட்டம் நடைபெறுகிறது. தற்போது, 58 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 213 உறுப்பினர்கள் இவ்வொன்றியத்தில் இடம்பெறுகின்றனர்.