• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
யேன் ஆனில் நடைபெற்ற சிறப்பு நினைவு நடவடிக்கை
  2011-11-08 15:25:06  cri எழுத்தின் அளவு:  A A A   

1941ம் ஆண்டு டிசம்பர் 3ம் நாள் சீனாவின் யேன் ஆன் குகையிலிருந்து ஜப்பானிய மொழியில் சீன வானொலி நிலையத்தின் ஒலிபரப்பு தொடங்கியது. அப்போது முதல் சீனாவின் வெளிநாட்டு ஒலிபரப்பு இலட்சியம் துவங்கியது. இதனுடன் சீன வானொலி நிலையமும் நிறுவப்பட்டது.

நவம்பர் 8ம் நாள் முன்னாள் யேன் ஆன் சிங்குவா வானொலி நிலையம் நிறுவப்பட்ட இடமான யேன் ஆன் குவாங் பி வென் குகையின் முன்னால் சீன வானொலிப் பிரதிநிதிக் குழுவினர் நினைவு கொண்டாட்டம் நடத்தினர்.சீன வானொலி நிலையத்தின் துணை இயக்குநர் குவான் யூன் பஃங், யேன் ஆன் நகராட்சியின் துணைத் தலைவர் பொஃங்ச்சிஹன், சீன மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் என 100க்கு மேற்பட்டோர் கொண்டாட்ட நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.


கடந்த 70 ஆண்டுகளின் வளர்ச்சியுடன் சீன வானொலி நிலையத்தில் இதுவரை 61 மொழிப் பிரிவுகள் உலக மக்களுக்கு சேவைபுரிகின்றன. செய்தியேடு, வானொலி, தொலைக்காட்சி, இணையதளம், பல்லூடகம் ஆகியவை ஒன்றிணைந்த செய்தி ஊடகம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சிறந்தச் செல்வாக்கை பெற்றுள்ளது. சிறந்தச் சர்வதேச சூழ்நிலையை உருவாக்குவதில் சீன வானொலி நிலையம் முக்கிய பங்கு ஆற்றியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040