1941ஆம் ஆண்டு டிசம்பர் 3ம் நாள், சீனாவின் யேன் ஆனில் உள்ள ஒரு குகையிலிருந்து ஜப்பானிய மொழி ஒலிபரப்பு தொடங்கியது. அப்போது முதல், சீனாவின் வெளிநாட்டு ஒலிபரப்பு இலட்சியமும் துவங்கியது. சீன வானொலி நிலையமும் நிறுவப்பட்டது.
நவம்பர் 8ம் நாள், முன்னாள் யேன் ஆன் சிங்குவா வானொலி நிலையம் நிறுவப்பட்ட இடமான யேன் ஆன் Wang Pi Wan குகையின் முன் சீன வானொலியின் பிரதிநிதிக்குழுவினர் கொண்டாட்டம் நடத்தினர்.
சீன வானொலி நிலையத்தின் துணை இயக்குநர் Wang Yun Pengகும், யேன் ஆன் துணை நகராட்சித் தலைவர் Feng Ji Hongகும், சீன மற்றும் வெளிநாட்டு விருந்தினரும் ஆக 100க்கு அதிகமானோர் இந்நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.