அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒப்பாமாவின் அழைப்பை ஏற்று சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் 10ம் நாள் பெய்ஜிங்கிலிருந்து அமெரிக்காவின் ஹவாய்க்குப் புறப்பட்டார். அங்கே நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 19வது தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் ஹுச்சிந்தாவ் கலந்து கொள்வார்.
நெருங்கிய தொடர்புறவு கொண்ட பிரதேசப் பொருளாதாரம் என்ற தலைப்பில் ஆசிய-பசிபிக் பொருளாதார அதிகரிப்பு, பிரதேசப் பொருளாதார ஒருங்கிணைப்பு, பசுமை அதிகரிப்பு, எரியாற்றல் பாதுகாப்பு, ஒத்துழைப்பை ஒழுங்குப்படுத்துவது முதலியவை நவம்பர் 12, 13ம் நாட்களில் ஹவாய் மாநிலத்தின் ஹொனோலுலு நகரில் நடைபெறுகின்ற இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும்.