ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு 19வது தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற உச்சிமாநாடு, வர்த்தகத்தை விரிவாக்குவது, தூய்மை எரியாற்றல் வளர்ச்சியை முன்னேற்றுவது, ஒத்துழைப்பைக் கட்டியமைப்பது ஆகியவற்றில் சாதனைகளைப் பெற்றுள்ளது என்று, அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா 13ஆம் நாள் ஹவாய் மாநிலத்தின் Honolulu நகரில், கூறினார். உச்சிமாநாடு நிறைவடைந்த பின், அவர் செய்தியாளர் கூட்டத்தில், இவ்வாறு தெரிவித்தார்.
செழுமையான அமைதியான வல்லரசாக உருவாகி வரும் சீனாவை அமெரிக்கா வரவேற்கிறது. மாபெரும் பொருளாதார வளர்ச்சியை சீனா பெறுவது, அமெரிக்க நலன்களுக்கு உகந்ததாக இருக்கிறது. அமெரிக்காவும் சீனாவும், பல துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஒன்றுக்கு ஒன்று, கூட்டாக வெற்றி பெறும் வாய்ப்புக்களை உருவாக்கலாம் என்று, ஒபாமா கூறினார்.