ஏபெக் அமைப்பு தலைவர்களின் 19வது அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் நவம்பர் 13ஆம் நாள் ஹவாயில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து உறுப்பு நாடுகளும், கூட்டு முயற்சி மற்றும் சமநிலை கலந்தாய்வு மூலம் பயனுள்ள முன்னேற்றங்களைப் பெற்றன. ஏபெக் அமைப்பின் கலந்தாய்வு மற்றும் கருத்தொற்றுமை என்ற கோட்பாட்டை, இது வெளிக்காட்டியது என்று சீனப் பிரதிநிதிக் குழுவின் செய்தித் தொடர்பாளர் மா சாவ்சு அன்று தெரிவித்தார்.
ஆசிய-பசிபிக் பிரதேசத்தில், வர்த்தக மற்றும் முதலீட்டின் தாராளமயமாக்கப் போக்கை முன்னேற்றித் தொடரவல்ல வளர்ச்சி, மாசுபாடின்மை, பல்வகைத் தன்மை படைத்த உலக மற்றும் ஆசிய-பசிபிக் பிரதேசத்தை உருவாக்குவதற்குச் சீனா பல்வேறு உறுப்பு நாடுகளுடன் இணைந்து ஆக்கமுடன் பங்கு ஆற்ற விரும்புவதாக மா சாசு கூறினார்.