
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் 19வது அதிகாரப்பூர்வமற்ற கூட்டம், 13ம் நாள் ஹவாயில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் இக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். இவ்வமைப்பின் பல்வேறு உறுப்பு நாடுகள் வர்த்தக மற்றும் மூதலீட்டின் தாராளமயமாக்கத்தையும் வசதிமயமாக்கத்தையும் பன்முகங்களிலும் விரைவுபடுத்த வேண்டும். ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் பசுமை எரியாற்றல் வளர்ச்சியி்ல் ஒத்துழைப்பை ஆழமாக்கி, பொருளாதார கட்டமைப்புச் சீர்திருத்தத்தையும், அமைப்பு முறைகளில் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த வேண்டுமென்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.