
உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த பின், சீனா வாக்குறுதியைப் நிறைவேற்றி, தனது சந்தையை மேலும் திறந்து வைத்து, சுங்க வரியைக் குறைத்து வருகிறது. உலகில் மிக பெருமளவில் திறந்த சந்தைகளில் ஒன்றாக சீனா மாறியுள்ளது. இது குறித்து சர்வதேச பொருளாதார மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் வேளாண் மற்றும் வர்த்தக பிரிவு அலுவலர் ஸஃபாடி கூறியதாவது—
"சந்தையைத் திறப்பது, முயற்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போக்காகும். சுங்க வரி, இறக்குமதி பங்கீட்டு அளவு, பரிசீலனை தொடர்பான விதிகள் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை குறைக்க வேண்டும். இடைவிடாமல் திறந்து வைக்கப்பட்டு வரும் சீனாவின் சந்தை, சீனப் பொருளாதார மதிப்பின் அதிகரிப்பையும் ஏற்றுமதி வளர்ச்சியையும் தூண்டியுள்ளது" என்று அவர் கூறினார்.
உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த பின், உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு சீனா பெரும் பங்காற்றியுள்ளது. ஆசியா, ஏன் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு கூட, சீனாவின் வலுவான வளர்ச்சி முக்கிய ஆற்றலாகவும் ஊன்றுகோலாகவும் திகழ்கிறது. அதனுடன், சீனாவின் திறப்பு சந்தை, தனது வர்த்தக அதிகரிப்பையும் முன்னேற்றியுள்ளது. ஸஃபாடி கூறியதாவது—
"உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்தமை, வெளிநாடுகளுக்கு மட்டுமல்ல, சீனாவுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. தவிர, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொழில் துறை, வணிகத் துறை முதலியவற்றில் சர்வதேச முன்னேறிய தொழில் நுட்பங்களை சீனா உட்புகுத்தியுள்ளது. சந்தை திறப்பு காரணமாக, சீனப் பொருளாதாரத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது" என்று அவர் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளாக, உலக வர்த்தக அமைப்பின் நடைமுறைகளையும் விதிகளையும் சீனா உணர்வுபூர்வமாக கடைப்பிடித்து, இவ்வமைப்பின் ஒரு முக்கிய உறுப்பு நாடாக மாறியுள்ளது. பல தரப்பு வர்த்தக விதிகளை வகுப்பதில் சீனா ஆக்கமுள்ள பங்கெடுப்பதுடன், சர்வதேச வர்த்தகத் துறையில் மிகப்பல வளரும் நாடுகளின் கருத்து வெளிப்பாட்டுரிமையை உயர்த்தவும் பாடுபட்டு வருகிறது.
மிகப்பெரிய வளரும் நாடான சீனா, வளரும் நாடுகளுக்கிடை ஒத்துழைப்பைத் தூண்டுவதில் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. உலகின் வர்த்தக முன்னேற்ற உதவி நடவடிக்கையிலும் சீனா ஊக்கத்துடன் பங்கெடுத்து, நன்கொடை வழங்குவது மற்றும் பயிற்சியளிப்பது மூலம் வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கு உதவியளித்து வருகிறது.
வெளிநாட்டுத் திறப்பை உள்நாட்டு வளர்ச்சி மற்றும் சீர்திருத்தத்துடன் இணைத்ததால் தான், பொருளாதாரத்தின் உலகமயமாக்கத்திலிருந்து பயன் பெறும் என்பதை உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த சீனாவின் நடைமுறை கோடிட்டுக் காட்டுகிறது. இந்த பாதையில் சீனா உறுதியாக நடைபோட்டு, மேலும் செயலாக்கமுள்ள திறப்புக் கொள்கையை செயல்படுத்தும்.