• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வெற்றிகரமான பயணம்
  2011-11-15 18:59:57  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்புத் தலைவர்களின் 19வது அதிகாரப்பூர்வமற்றக் கூட்டம் அமெரிக்காவின் ஹவாயில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவுடன் பயணம் மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் யாங் சியேச்சு இது குறித்து சீன வானொலி செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில், இப்பயணம் வெற்றிகரமாக அமைந்தது என்று கூறினார்.

சர்வதேச நிதி நெருக்கடியின் தாக்கம் ஆழமாகுவது, உலக முக்கிய பொருளாதாரங்களின் அதிகரிப்பு வேகம் தணிவு அடைவது, ஆசிய-பசிபிக் பிரதேசம் உயிராற்றல் மற்றும் உள்ளார்ந்த ஆற்றல் மிக்க பிரதேசமாக மாறுவது, ஏபெக் அமைப்பு புதிய வளர்ச்சி வாய்ப்புகளை எதிர்நோக்குவது ஆகியவற்றின் பின்னணியில் இக்கூட்டம் நடைபெற்றது என்று அவர் கூறினார். கூட்டத்தில் அரசுத் தலைவர் ஹுச் சிந் தாவ் உரை நிகழ்த்துகையில், உலக மற்றும் ஆசிய-பசிபிக் பொருளாதார நிலைமை பற்றியும், ஆசிய-பசிபிக் ஒத்துழைப்பு பற்றியும் கருத்துக்களைத் தெரிவித்தார். மேலும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி, பல தரப்புடன் ஒத்துழைத்து கூட்டு வெற்றி பெறும் கருத்து முதலியவற்றையும் அவர் எடுத்து கூறினார்.

கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவின் பங்களிப்பு குறித்து சர்வதேசச் செய்தி ஊடகங்கள் மிகுந்த கவனம் செலுத்தின. இது பற்றி அவை அதிக செய்திகளை வெளியிட்டு, சீனா வெளிப்படுத்திய ஆக்கமுள்ள, பொறுப்பான பங்கினை உயர்வாகப் பாராட்டின. உலகப் பொருளாதாரம் கடும் அறைகூவல்களை எதிர்நோக்கும் போது, ஆசிய-பசிபிக் பிரதேசப் பொருளாதாரத்தின் நீண்டகால நிதானமான வேகமான வளர்ச்சியினை நனவாக்குவது உலகப் பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று யாங் சியேச்சு கூறினார்.

இவ்வாண்டு சீனாஉலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த 10வது ஆண்டாகவும், ஏபெக் அமைப்பில் சேர்ந்த 20வது ஆண்டாகவும் உள்ளது. சர்வதேச நிதி நெருக்கடியின் பாதிப்பில் சீனாவின் பொருளாதாரம் நிதானமான வளர்ச்சியை நிலைநிறுத்தியுள்ளது. உலகப் பொருளாதாரத் துறையிலும் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அவை பல்வேறு தரப்புகளின் கவனத்தை ஈர்த்துள்ளன என்று யாங் சியேச்சு கூறினார்.

பயணத்தின் போது அமெரிக்க அரசுத் தலைவர் பெரு அரசுத் தலைவர், ஜப்பான் தலைமை அமைச்சர் முதலியோரை ஹு சிந்தாவ் சந்தித்துரையாடினார். தொடர்புடைய நாடுகளுடனான நட்பு ஒத்துழைப்புறவை இச்சந்திப்புகள் ஆழமாக்கியுள்ளன.

ஏபெக் தலைவர்கள் கூட்டத்தில் அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் கலந்து கொள்வது, பிரதேச ஒத்துழைப்பை ஆழமாக்குதல், பிரதேசப் பொருளாதார ஒருமைப்பாட்டை விரைவுப்படுத்துதல், சம நிலையிலான கூட்டு வெற்றி பெறக் கூடிய பல தரப்பு வர்த்தக கட்டமைப்பை உருவாக்குதல், ஏபெக் அமைப்பின் நீண்டகால வளர்ச்சி முதலியவற்றில் முக்கியமான ஆழமான செல்வாக்கை ஏற்படுத்துவது உறுதி என்று யாங் சியேச்சு கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040