சீன வானொலி நிலையம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம் 29ம் நாள் பெய்சிங்கில் சிறப்பாக நடைபெற்றது. வரலாற்றுக்கு மதிப்பை அளித்து, எதிர்காலத்தை நோக்குவது என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 1941ஆம் ஆண்டு டிசம்பர் 3ம் நாள் யான் ஆன்னில் உள்ள ஒரு குகையிலிருந்து ஜப்பானிய மொழி ஒலிபரப்பு துவங்கியது முதல், தற்போது உலகில் மிக அதிகமான மொழிகள், முழுமையான செய்தி ஊடக வடிவங்கள் ஆகியவை கொண்ட, உலகளவில் நேயர்கள் பரவல் செய்யும் நவீன பன்னோக்க புதிய ரக செய்தி ஊடக வலைப்பின்னலாக மாறியிருப்பது வரையான வளர்ச்சி போக்கினை கலை நிகழ்ச்சிகள் வெளிப்படுத்தின.
சீனத் தேசிய வானொலி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தலைமை நிர்வாகத்தின் தலைவர்கள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டு பிரப்புரை அலுவலகத்தின் அதிகாரிகள், சீனாவில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதர்கள், உள்நாட்டு வெளிநாட்டு செய்தி ஊடகங்களின் பிரதிநிதிகள், நட்பார்ந்த பிரமுகர்கள், சீன வானொலி நிலையத்தின் தலைவர்கள், மூத்த வானொலி பணியாளர்கள், சீன மற்றும் அன்னிய பணியாளர்களின் பிரதிநிதிகள் ஆக மொத்தம் 900 பேர் இக்கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
70 ஆண்டுகால வளர்ச்சிப் பாதையில் இன்னல்களும், சில தலைமுறை சர்வதேச வானொலி பணியாளர்களின் கனவுகளும் நிறைந்து காணப்படுகின்றன. கலை நிகழ்ச்சிகளுக்கு இடையே நவ சீனா நிறுவப்பட்டதற்கு முன் வெளிநாட்டு வானொலி இலட்சியத்தில் ஈடுபட்ட மூத்தப் பணியாளர்களுக்கு வாழ் நாள் சாதனை விருது வழங்கப்பட்டது.
சர்வதேச வானொலி மூத்தப் பணியாளரான Chen Wei சீன வானொலி நிலையத்தின் வளர்ச்சியில் பெருமையடைவதாக கூறினார்.
"மூத்தப் பணியாளரான நான், சீன வானொலி நிலையத்தின் இலட்சிய வளர்ச்சியைக் கண்டு, மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் அனைவரும் பணியாளர்களாக இருப்பதில் பெருமையடைகிறேன். வாழ்த்துக்கள்" என்றார் அவர்.
சீன வானொலி நிலையத்தின் இயக்குநர் Wang Geng Nian கூறியதாவது:
"தற்போதைய உலகத்தில், மிக பயனுள்ள சர்வதேச செய்தித் தொடர்பு, பல செய்தி ஊடகங்களும் பல மொழிகளும் கொண்ட பன்னோக்க செய்தி சேவையாகும். மிக முன்னேறிய செய்தி ஊடக வடிவங்கள், பாரம்பரிய செய்தி ஊடகங்கள் மற்றும் புதிய ரக செய்தி ஊடகங்களை இணைத்து இச்சேவை வழங்கப்படுகிறது. தற்போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் தலைமையில், சீன வானொலி நிலையம், நவீன பன்னோக்க புதிய ரக சர்வதேச செய்தி ஊடக வலைப்பின்னல் உருவாக்குவதை விரைவுபடுத்த பாடுபடுகின்றது. CIBN எனப்படும் சீன சர்வதேச ஒலிபரப்பு வலைப்பின்னல் என்ற இணையத் தொலைக்காட்சி, சர்வதேச பரப்புரை ஆற்றலை பன்முகங்களிலும் உயர்த்துவதற்கான மைய நடவடிக்கையாக இருக்கும்" என்றார் அவர்.