டிசெம்பர் 3ம் நாளிரவு சீன வானொலி நிலையத்தின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பெய்ஜிங்கிலுள்ள அரசு விருந்தினர் ஹோட்டலான தோயூதைவில் சீன வானொலி நேயர்களும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களும் கலந்து கொண்ட கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
சீனாவுக்கான பன்னாட்டுத் தூதர்கள், அவர்களது துணைவியார், செய்தி ஊடகங்களின் பிரதிநிதிகள், பரிசு பெற்ற நேயர் பிரதிநிதிகள், பத்து தலைச்சிறந்த நேயர் மன்றங்களின் பிரதிநிதிகள், மூத்த தலைமுறை பணியாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தாராளமாக நட்பு பற்றி உரையாடினர்.
சீன வானொலி நிலையத்தின் இயக்குநர் குவான்கங்நியன் இந்நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தினார். கடந்த 70 ஆண்டுகளில் நேயர் நண்பர்களுடன் சீன வானொலி நிலையம் நெருங்கிய நட்பை அதிகரித்துள்ளது. சீன வானொலி நிலையத்தை நேசிக்கின்ற நண்பர்கள் கடிதம் எழுதுவது, நினைவு பொருட்களை வழங்குவது உள்ளிட்ட பல்வகை வடிவங்களில் வானொலி நிலையத்திற்கு உளமார்ந்த பற்றுதல் உணர்வை தெரிவித்து வருகின்றனர் என்றார் இயக்குனர் குவான்கங்நியன்.
இதற்கிடையில் நேயர் பிரதிநிதிகளும் வெளிநாட்டு ஒத்துழைப்பு ஊடகங்களின் பிரதிநிதிகளும் இக்கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரைநிகழ்த்தி சீன வானொலி நிலையத்தின் 70வது ஆண்டு நிறைவுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்தனர்.