இவ்வாண்டு சீன வானொலி நிலையமும் சீன மக்களின் வெளிநாட்டு ஒலிபரப்பு இலட்சியமும் 70வது ஆண்டு நிறைவாகும். சீன வானொலி நிலையத்தில் பணிபுரிந்து அரசு நட்பு விருது பெற்ற அந்நிய நிபுணர்களில் சிலர் அழைப்பை ஏற்று, மீண்டும் சீனாவுக்கு வந்தனர். கடந்த சில ஆண்டுகளில் சீன வானொலி நிலையத்திலும் முழு சீனாவிலும் ஏற்பட்ட மாபெரும் மாற்றங்களை அவர்கள் கூட்டாக அறிந்து கொண்டனர். டிசம்பர் 4 முதல் 8ஆம் நாள் வரை, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், வட கொரியா, ரஷியா, ஜெர்மனி, துருக்கி, நார்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த 11 நிபுணர்கள் அடங்கிய குழு சிச்சுவான் மாநிலத்தின் சேங்தூ நகரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது.
இந்த நிபுணர்கள் குழுவில் தமிழ்ப் பிரிவின் முன்னாள் நிபுணர் இவ்வாண்டு 64 வயதாகும் கடிகாச்சலாம் அவர்கள், சீனாவில் மிக நீண்டகாலமாக பணிபுரிந்த ஒருவர். அவர் சீனாவில் பணிபுரிந்த 12 ஆண்டுகாலம், சீன வானொலி நிலையமும் சீனாவும் தலைகீழான மாற்றங்கள் அடைந்த காலமாகும்.
சலாம் அவர்களைப் பொறுத்தவரை, சீனாவின் பெரிய மாற்றங்களை நேரில் கண்டு களித்துள்ளார். இது மட்டுமல்ல, பல ஆண்டுகளாக பிரிந்த பழைய நண்பர்களையும் மீண்டும் சந்தித்துள்ளார். கடந்த நூற்றாண்டின் 80, 90ஆம் ஆண்டுகளில், இந்நிபுணர்கள் சீன வானொலி நிலையத்தின் ஏற்பாட்டில், சீனாவின் பல நகரங்களிலும் கிராமங்களிலும் பணிப் பயணம் மேற்கொண்டனர். தத்தமது மொழித் துறையில் பெற்றுள்ள சாதனைகளைத் தவிர, இந்த மூத்த நிபுணர்கள் சீனா பற்றி பன்முகங்களிலும் சிறப்பாகவும் அறிந்து கொள்கின்றனர். 1991ஆம் ஆண்டு சீன அரசு நட்பு விருது நிறுவப்பட்டது முதல் இன்றுவரை சீன வானொலி நிலையத்தில் பணிபுரிந்த 15 நிபுணர்களுக்கு இப்பெருமை சேர்க்கப்பட இது காரணமாகியது.
4 நாட்களாக, சேங்தூ நகரத்தில் முதல்முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்த நிபுணர்கள், ராட்சத பாண்டா இனப்பெருக்க மற்றும் வளர்ப்பு ஆய்வு தளம், அழகான Du Jiang Yan காட்சியிடம், நீண்ட வரலாறுடைய Du Fu வைக்கோலாலான குடிசைப் பகுதி முதலிய இடங்களைப் பார்வையிட்டனர்.
சேங்தூ பயணத்தின் கடைசி இடமான பழமை வாய்ந்த Ping Le சிறு நகரில், பிரமுகர் மற்றும் வலைப்பூ பக்கம் திறப்பவரின் பார்வையில் சேங்தூ எனும் முதலாவது பரிமாற்றக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
துருக்கியைச் சேர்ந்த நிபுணர் பூசே கூறியதாவது—
"அருமையான எதிர்காலத்தை சீனா உருவாக்கும் அதேவேளை, உலகிலுள்ள இதர நாடுகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்தையும் கொண்டு வர வேண்டும் என சீனாவின் நண்பர்களாக நாங்கள் விரும்புகின்றோம்" என்று அவர் கூறினார்.