
ஹூச்சந்தாவ் கூறியதாவது:
"உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த பிறகு, உரிமைகளை அனுபவிப்பதையும், கடமைகளை நிறைவேற்றுவதையும் இணைப்பதில் சீனா ஊன்றி நிற்கின்றது. சொந்த வளர்ச்சியையும் பல்வேறு நாடுகளின் கூட்டு வளர்ச்சியையும் தூண்டி, அறைகூவலை வாய்ப்பாக சீனா மாற்றியுள்ளது. மேலும் பெரிய அளவிலும், மேலும் உயர்ந்த நிலையிலும் உலகப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் போட்டியில் பங்கெடுத்து, வெளிநாட்டுத் திறப்பு ரகப் பொருளாதாரத்தை பெரிதும் வளர்த்து, சீனாவுக்கும் உலகத்துக்குமிடை உறவில் குறிப்பிடத்தக்க மேம்பாடு ஏற்படுவதை தூண்டியுள்ளது" என்று தெரிவித்தார்.
உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த பின், வெளிநாட்டுத் திறப்பு அளவை சீனா விரிவாக்கியுள்ளது. இது சீனாவின் 130 கோடி மக்களுக்கும், உலக மக்களுக்கும் நன்மை புரிந்துள்ளது. சீனாவின் வளர்ச்சி, அமைதியான வளர்ச்சியாக, திறப்பான வளர்ச்சியாக, ஒத்துழைப்பான வளர்ச்சியாக மற்றும் ஒன்றுக்கொன்று நன்மை பயக்கும் வளர்ச்சியாக திகழ்கிறது. பழமை வாய்ந்த கீழை நாடான சீனா, தனது செழுமையான உயிராற்றலையும், மாபெரும் உள்ளார்ந்த ஆற்றலையும் உலகிற்கு எடுத்தியம்பியுள்ளதை உண்மைகள் கோடிட்டுக்காட்டுவதாக ஹூச்சிந்தாவ் தெரிவித்தார்.
ஐ.நா வர்த்தக மற்றும் வளர்ச்சி மாநாட்டு அமைப்பின் தலைமை இயக்குநர் சுபாச்சாய் பனிச்பக்டி இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகையில், சீனா உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்தது, உலகிற்கும், உலகில் உள்ள இதர பிரதேசங்களுக்கும், பலதரப்பு வர்த்தக அமைப்பு முறைக்கும் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் ஐயமில்லை என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"சீனா உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த பின், வளரும் நாடுகளுக்கு அது அதிக அனுபவங்களைத் தந்துள்ளது. வளர்ச்சிப் பிரச்சினைக்கான தீர்வு முறையை இந்நாடுகள் கண்டறிய உதவி செய்வதன் மூலம், இந்நாடுகளின் மக்களுக்கு மேலும் ஒளிவீசும் எதிர்காலம் உருவாகும்" என்றார் சுபாச்சாய் பனிச்பக்டி.