• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்துக்கு வந்துள்ள பயணிகளின் எண்ணிக்கை
  2011-12-27 16:39:28  cri எழுத்தின் அளவு:  A A A   

இவ்வாண்டு திபெத்தில் பயணம் மேற்கொண்டுள்ள சீன மற்றும் அன்னியப் பயணிகளின் எண்ணிக்கை, 85 லட்சத்தை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டில் இருந்ததை விட 24.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. திபெத்தின் சுற்றுலா மூலமான வருமானம், 950 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டில் இருந்ததை விட 33 விழுக்காடு அதிகரித்துள்ளது. 26ம் நாள் லாசா நகரில் நடைபெற்ற திபெத் பொருளாதாரப் பணிக்கூட்டத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திபெத்தில் அதிகமான சுற்றுலா மற்றும் பண்பாட்டு வளங்கள் உண்டு. கடந்த சில ஆண்டுகளில், சிங்காய்-திபெத் இருப்புப்பாதையும், லின் சி மற்றும் அலி விமான நிலையங்களும் போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டு, திபெத் சுற்றுலாத் துறை வளர்ச்சியின் பொற்காலம் உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040