திபெத்தின் அமைதி விடுதலைக்குப் பிந்திய கடந்த 60 ஆண்டுகளாகத், அதன் அடிப்படை வசதிகளின் கட்டுமானத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது. இது திபெத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டியுள்ளது. தொடர்ந்து 3 ஆண்டுகளாகத், திபெத் பொருளாதாரம் 12 விழுக்காட்டுக்கு மேலான அதிகரிப்பை நிலைநிறுத்தி வருகிறது என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் டிசம்பர் 29ஆம் நாள் தெரிவித்தது.
12 வது ஐந்தாண்டு திட்டம் ]நடைமுறையாகும் காலத்தில், 226 முக்கிய திட்டப்பணிகளைத் திபெத் செயல்படுத்தும். அதில், விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான 71 திட்டப்பணிகள் இடம் பெறுகின்றன. அதற்கு 6 ஆயிரத்து 410 கோடி யுவான் ஒதுக்கீடு செய்யப்படும்.