தென்னாப்பிரிக்க புலோம்ஃபான்ற்றெயனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்ட நூறாண்டு நிறைவு விழாவில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அமைப்புத்துறைத் தலைவர் லியுவான் ச்சோ 8ஆம் நாள் கலந்து கொண்டார். அப்போது, அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தென்னாப்பிரிக்க அரசுத் தலைவருமான ஜேக்கப் ட்சுமாவை அவர் சந்தித்துரையாடினார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி சார்பாக, தென்னாப்பிரிக்காவின் தேசியக் காங்கிரஸ் கட்சியின் நூறாண்டு விழாவுக்கு லியுவான் ச்சோ வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
ஜேக்கப் ட்சுமா கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடனான உறவையும் பரிமாற்ற ஒத்துழைப்பையும் மேலும் ஆழமாக்க இக்கட்சி விரும்புவதாக அவர் தெரிவித்தார்.