திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் பள்ளிக்கு முந்திய கல்வி முதல் உயர் நடுத்தரப் பள்ளிக் கல்வி வரை மாணவர்களில் 95 விழுக்காட்டினர் உணவு, பள்ளி விடுதி, கல்வி ஆகியவற்றுக்கானக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
அண்மையில் நடைபெற்ற திபெத் பொருளாதாரப் பணிக் கூட்டத்தில் இப்பிரதேசத்தின் பொறுப்பாளர் ஒருவர் இதைத்தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டில் திபெத்தில் பள்ளி மாணவர்களின் நபர்வாரி மானியம் ஆண்டுக்கு 2300 யுவானாகும். 2015ம் ஆண்டு இத்தொகை 3000 யுவானாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது.