திபெத் செய்தி ஊடகக் குழுமம் நிறுவப்படும் என்றும், இது திபெத்தின் வரலாற்றில் முதலாவது செய்தி குழுமமாக மாறும் என்றும் திபெத் தன்னாட்சி பிரதேச அரசு 11ம் நாள் லாசா நகரில் தெரிவித்தது.
செய்தித்தாள், இதழ் உள்ளிட்ட பாரம்பரிய செய்தி ஊடகங்களும், மின்னணு ஊடகங்களும், பண்பாடு மற்றும் சுற்றுலா கூட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்களும் இக்குழுமத்தில் இடம்பெறுகின்றன என்று திபெத் தன்னாட்சி பிரதேச அரசின் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.