2011ம் ஆண்டு திபெத் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் நபர்வாரி வருமானம் 4700 யுவானை எட்டியது. 2010ம் ஆண்டில் இருந்ததை விட இது 13.6 விழுக்காடு அதிகம். கடந்த 7 ஆண்டுக்காலத்தில் இந்த விகிதம் அதிக அளவாக, 10 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது என்று அண்மையில் லாசாவில் நடைபெற்ற சீன திபெத் கிராமப்புறப் பொருளாதாரக் கூட்டம் தெரிவித்தது. 2012ம் ஆண்டில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வருமானத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் அரசு தெளிவுபடக் கூறியுள்ளது.
விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வருமான அதிகரிப்பு விகிதத்தை, 13 விழுக்காட்டைத் தாண்ட வைப்பது, தானிய உற்பத்தி அளவை, 9 இலட்சத்து 50 ஆயிரம் டன்னை தாண்ட வைப்பது ஆகியவை 2012ம் ஆண்டில் திபெத் கிராமப்புறப் பணியின் முக்கிய நோக்கங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.