2011ஆம் ஆண்டு நவம்பர் வரை, சீனாவின் முக்கியத் திட்டப்பணியான திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் லாசாவிலிருந்து ரிகேசேவுக்குச் செல்லும் இருப்புப் பாதைப் பணிக்கு மொத்தம் 340 கோடி யுவான் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த முதலீட்டில் இது 25 விழுக்காடாகும். இத்திட்டப்பணியின் கட்டுமானம் தடையின்றி நடைபெற்று வருகிறது. 18ஆம் நாள் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் இதனைத் தெரிவித்தது.
லாசாவிலிருந்து ரிகேசேவுக்குச் செல்லும் இருப்புப் பாதை மூலம் ஆண்டுக்கு 83 லட்சம் டன்னுக்கு மேலான சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியும். இவ்விருப்புப் பாதை 4 ஆண்டுகளுக்குள் கட்டிமுடிக்கப்படும். அதன் மொத்த நீளம் 253 கிலோமீட்டராகும். திபெத்தின் தென் மேற்குப் பகுதி, நெடுஞ்சாலைப் போக்குவரத்தை மட்டுமே சார்ந்திருக்கும் நிலைமை இந்த இருப்புப் பாதையின் மூலம் முற்றிலும் மாற்றப்படும்.