• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்ஜிங் மாநகரில் சீனப் பெருஞ்சுவர், சொர்க்கக் கோயில், கோடைக்கால மாளிகை, அரண்மனை அருங்காட்சியகம், மிங் வம்சக் கல்லறைகள், ஷோகோதியன் சிதிலம் ஆகிய மொத்தம் ஆறு உலகப் பண்பாட்டு மரபுச் செல்வங்கள் அமைந்துள்ளன. உலகளவில் மிக அதிகமான உலகப் பண்பாட்டு மரபுச் செல்வங்களைக் கொள்கின்ற நகரம் என்ற பெருமை பெய்ஜிங்கிற்கு உண்டு.
இன்று காணப்படுகின்ற சீனப் பெருஞ்சுவர் சான் குவோ காலத்திலும் அதற்குப் பிந்தைய காலத்திலும் கட்டியமைக்கப்பட்ட அடிப்படையில், மிங் வம்சம் இடைவிடாமல் மேம்படுத்திய பெருஞ்சுவராகும். கிழக்கில் போஹாய் கடலிலிருந்து மேற்கில் கான் சூ பாலைவனம் வரை நீடிக்கும் 6 ஆயிரத்து 3 நூறு கிலோமீட்டர் நீளமுடைய பிரம்மாண்டமான தற்காப்பு முறைமையாக அது மாறியுள்ளது.
அரண்மனை அருங்காட்சியகம், இதன் முன்னாள் பெயர் தடுக்கப்பட்ட நகரம் என்பதாகும். மிங் மற்றும் சிங் வம்சங்களின் மன்னர் அரண்மனையாக இது விளங்குகிறது. உலகில் முழுமையாகப் பேணிக்காக்கப்படுவரும் மிகப் பெரிய பண்டைக்கால மன்னர்களின் அரண்மனைக் கட்டிடங்களில் இதுவும் ஒன்று ஆகும். நிலப்பரப்பு 7லட்சத்து 20 ஆயிரம் சதூர மீட்டருக்கும் அதிகமாகும்.
யூங் திங் மென் உள் வீதியில் அமைந்திருக்கும் தியென் தான் கோயில், மிங் ச்சிங் வம்சத்தின் மன்னர்கள் தெய்வத்தை வழிபட்டு, அமோக அறுவடை பெறப் இறைவேண்டல் செய்த இடமாகும். அது 27இலட்சத்து 30ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவுடையது. தியென் தான் கோயில், சீனாவில் மிக முக்கியமாகப் பாதுகாக்கப்பட்டு வரும் வழிபாட்டுக் கட்டிடங்களில் ஒன்றாகவும்,
முன்னாள் கோடைக்கால மாளிகையின் பெயர் சிங் யி மாளிகை என்பதாகும். சிங் வம்சக் காலத்தின் பேரரசர் சியே லுங் ஆட்சிக்கு வந்த 15வது ஆண்டு (1750ஆம் ஆண்டு)முதல், இது கட்டப்பட்டத் தொடங்கியது. இது சீனாவின் இறுதி நிலப்பிரபுத்துவ வம்சம் கட்டிய கடைசி அரசு மாளிகை ஆகும். இது, உலகளவில் மிக பெரிய அரச மாளிகையும் ஆகும்.
மிங் வம்சக் கல்லறைகள் பெய்ஜிங் நகரில் சாண் பிங் மாவட்டத்தின் வட பகுதிலுள்ள தியான் சொ மலையில் அமைந்துள்ளன. மிங் வம்சத்துக்குப் பின், தலைநகர் பெய்ஜிங்க்கு மாற்றப்பட்டது. மிங் வம்சக் கல்லறைகள் 13 சீனப் பேரரசர்கள் மற்றும் அவர்களது மனவியர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளாகும்
பீக்கிங் மனிதன் என்னும் மனிதகுலத்தின் ஆதி வரலாற்றுப் புதை படிவம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் பாங்சான் மாவட்டத்தின் ஷோகோதியென் நகரிலுள்ள லோன்கு மலை, உலகளவில் புகழ் பெற்ற, மனிதகுலம் மிகவும் முன்னதாகத் தோன்றிய இடமாக மாறியுள்ளது.
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040