சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியும், சீன அரசவையும் 21ம் நாள் முற்பகல் சீன மக்கள் மாமண்டபத்தில் 2012ஆம் ஆண்டு வசந்த விழா விருந்தளித்தன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசுத் தலைவர்கள் ஹு சிந்தாவ், வூ பாங்கோ, வென் சியாபாவ், சியா சிங்லின், லீ சாங்சுன், ஷிச்சின்பீங், லீக்ச்சியாங், ஹே கோச்சியாங், சோ யூங்காங் ஆகியோர், பெய்சிங்கின் பல்வேறு சமூகத் துறையினருடன் இணைந்து மகிழ்ச்சியுடன், வசந்த விழாவைக் கூட்டாகக் கொண்டாடினர்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டித் தலைமைச் செயலாளரும், அரசுத் தலைவரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய ராணுவக் கமிட்டித் தலைவருமான ஹூ சிந்தாவ் இவ்விருந்துக்குத் தலைமை தாங்கினார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழு நிரந்தர உறுப்பினரும், தலைமையமைச்சருமான வென்ச்சியாபாவ் இவ்விருந்தில் உரை நிகழ்த்தினார்.