ஐ.நாவின் இணையதளத்தில் வைக்கப்பட்ட வாழ்த்துரையின் நிகழ்படத்தில், புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று பான் கிமூன் தொடக்கத்தில் தெளிவான சீன மொழியில் கூறினார். பின்னர் ஆங்கில மொழியில் பேசுகையில், வசந்த விழா, உற்றார் உறவினர்களும் நண்பர்களும் மகிழ்ச்சியுடன் ஒன்று கூடும் தருணமாகும் என்றும், சீர்திருத்தத்தை மேற்கொள்ளும் தெம்பு ஆற்றல் மற்றும் திறன் நமக்கு உண்டு என்பதை டிராகன் ஆண்டு காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
உயிர்த்துடிப்பு மிக்க டிராகன் ஆண்டில் சீன மக்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் தனது உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.