ஜனவரி 23ம் நாள் சீன பாரம்பரிய வசந்த விழாவாகும். வசந்த விழா விடுமுறையின் முதல் நாளில் நாட்டின் பல்வேறு முக்கிய சுற்றுலா நகரங்களும் காட்சி தலங்களும் பல்வகை நாட்டுப்புறப் பண்பாட்டுச் சுற்றுலா நடவடிக்கைகளை மேற்கொண்டன. மங்களமான சூழ்நிலையில் வசந்த விழாவின் பண்பாட்டுச் சுற்றுலா நடவடிக்கைகள் துவங்கின.
பெய்ஜிங்கில் 2012 சுற்றுலா மற்றும் உணவுப்பொருள் கொண்டாட்ட நடவடிக்கை துவங்கியுள்ளது. தியென் ஜின் மாநகரில் இந்நகரத் தனிச்சிறப்பு வாய்ந்த நாட்டுப்புற நடவடிக்கைகள் நடைபெற்றன. ஷாங்காயின் ஜின் மொவ் மாளிகை, சிறப்புக் கண்காட்சியை நடத்துகிறது. சீன கன்பியூசியஸ் பண்பாட்டை அனுபவிக்க விரும்புவோர், கன்பியூசியஸின் பிறந்த இடமான ஷான் துங் மாநிலத்தின் ச்சூஃபூ நகரத்திற்குச் சென்று நாட்டுபுற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளலாம்.