ஜனவரி 23ம் நாள் சீனப் பாரம்பரிய நாட்காட்டியின் படி டிராகன் ஆண்டின் முதல் நாளாகும். சீனாவில் பல்வேறு முக்கிய சுற்றுலா நகரங்களும் காட்சித் தலங்களும் மிகப்பல பயணிகளை வரவேற்று வருகின்றன. வசந்த விழாவில் நாட்டின் தென் பகுதியிலும் வட பகுதியிலும் சுற்றுலாச் சந்தை சுறுசுறுப்பாக காணப்படுகிறது.
வடக்கு பகுதியில் நாட்டுப்புறப் பழக்க வழக்கங்கள் நிறைந்த நடவடிக்கைகளும், பனிச் சறுக்கு விளையாட்டும் தென் பகுதிகளைச் சேர்ந்த பல பயணிகளை ஈர்த்துள்ளன.
தென் பகுதியிலுள்ள ஷாங்காய் மாநகரில் கீழை முத்து என்று அழைக்கப்படும் தொலைக்காட்சி கோபுரத்தை 23ம் நாளன்று 22 ஆயிரம் மக்கள் கண்டுகளித்தனர். அதே நாள் ஹாங்ஷோ லிங்யின் கோயில் 58 ஆயிரத்து 200 பேரை வரவேற்றுள்ளது.