2012ம் ஆண்டின் ஜனவரி 22 முதல் 28ம் நாள் வரை, சீன வசந்த விழாவின் போது,சுமார் 3 கோடியே 13 இலட்சத்து 4 ஆயிரம் பயணிகள் இருப்புப் பாதை போக்குவரத்து மூலம் பயணம் மேற்கொண்டுள்ளனர். 2920 தற்காலிக தொடர்வண்டிகள் அப்போது இயங்கின என்று சீன இருப்புப் பாதை அமைச்சகம் 29ம் நாள் செய்தி வெளியிட்டது.
சீன வசந்த விழாவின் போது, 3 கோடியே 19 இலட்சத்து 73 ஆயிரம் பயணச் சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. அதில் ஏறக்குறைய 65 இலட்சம் பயணச் சீட்டுகள், இணையத்தளம் மற்றும் தொலைப்பேசி மூலம் விற்பனை செய்யப்பட்டு, மொத்தப் பயணச் சீட்டு விற்பனையில் 0.3 விழுக்காடு வகித்தன.