7 நாட்கள் நீடித்த வசந்த விழா விடுமுறையில், 3 கோடியே 13 லட்சத்து 4 ஆயிரம் மக்களையும் 7 கோடியே 31 லட்சத்து 30 ஆயிரம் டன் சரக்குகளையும் சீன இருப்புப் பாதை ஏற்றிச்சென்றது. கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, இது 2 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று ஜனவரி 29ஆம் நாள் சீன இருப்புப் பாதை அமைச்சகத்திலிருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.
வசந்த விழாவின் போது, சீனாவின் தெற்குப் பகுதியில் பெரும்பாலும், மழை மற்றும் பனி பெய்த வானிலை காணப்பட்டது. இதை இருப்புப் பாதைப் பிரிவுகள் ஆக்கப்பூர்வமாகச் சமாளித்து, நிலவரத்துக்கேற்ப, தற்காலிகத் தொடர்வண்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்தன. பெரிய தொடர்வண்டி நிலையங்களில் பயணிகள் முடக்கப்பட்ட நிலை காணப்படவில்லை