இவ்வாண்டு வசந்த விழா விடுமுறை நாட்களில், சீனா 17 கோடியே 60 லட்சம் சுற்றுலாப் பயணிகளை வரவேற்றியது. அதன் சுற்றுலா வருமானம் 10 ஆயிரத்து நூற்று நாற்பது கோடி யுவானை எட்டியது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 23.6 விழுக்காடு அதிகமாகும் என்று சீன விடுமுறைச் சுற்றுலா பிரிவுகளுக்கிடை ஒருங்கிணைப்பு அலுவலகம் 29ம் நாள் வெளியிட்ட புள்ளிவிபர அறிக்கை தெரிவிக்கிறது.
புள்ளிவிபரங்களின்படி, சீனாவின் வசந்த விழா விடுமுறை நாட்களின் சுற்றுலா வருமானத்தில், பயணியர் விமானச் சேவையின் வருமானம் 550 கோடி யுவானையும், இருப்புப் பாதையின் வருமானம் 305 கோடி யுவானையும் எட்டின. சீனாவின் 39 முக்கியச் சுற்றுலா நகரங்கள் சுற்றுலா மூலம் 3800 கோடிக்கும் அதிகமான யுவான் வருமானத்தை நனவாக்கியுள்ளன. பிறப் பிரதேசங்களின் சுற்றுலா வருவாய் 5400 கோடி யுவானை எட்டியது.