2012ம் ஆண்டு வசந்த விழாக் காலத்தில், சீனாவில் பல்வேறு வங்கிகளுக்கிடையில் சீன யூனியன் பே பண அட்டைகள் மூலம் நடைபெற்ற வர்த்தக தொகை 10 ஆயிரத்து 290 கோடி யுவானைத் தாண்டியது. இத்தொகை, கடந்த ஆண்டை விட 32 விழுக்காடு அதிகம். வெளிநாடுகளில் நடைபெற்ற வர்த்தக தொகை, கடந்த ஆண்டை விட 39 விழுக்காடு அதிகம் என்று சீன யூனியன் பே பண அட்டை நிறுவனம் தெரிவித்தது.புள்ளிவிபரங்களின் படி, வசந்த விழாக் காலத்தில், பண அட்டைகளை பயன்படுத்தி செய்யப்பட்ட நுகர்வு, மக்களின் வாழ்க்கை மற்றும் சேவைத் துறையை சேர்ந்தது.வசந்த விழாக் காலத்தில், நிறைய சீனர்கள், வெளிநாடுகளில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டனர். இவ்வாறு சீன யூனியன் பே பண அட்டைகளை பயன்படுத்திய அளவு விரிவாகியது.