சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் புள்ளிவிபரப் வாரியமும் தேசிய புள்ளிவிபர ஆணையத்தின் திபெத் கள ஆய்வுத் தலைமை அணியும் புதிதாக வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, 2011ம் ஆண்டு, திபெத் சுற்றுலா துறை, வேகமான அதிகரிப்புப் போக்கைத் தொடர்ந்து நிலைநிறுத்தியது. ஏறக்குறைய 87 இலட்சம் உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் திபெத்தில் பயணம் மேற்கொண்டனர். இது, முந்தைய ஆண்டில் இருந்ததை விட, 27 விழுக்காடு அதிகமாகும்.
2011ம் ஆண்டு, 84 இலட்சத்து 30 ஆயிரம் உள்நாட்டுப் பயணிகள், திபெத்தில் பயணம் மேற்கொண்டனர். இது, 2010ம் ஆண்டில் இருந்ததை விட, 27 விழுக்காடு அதிகமாகும். சீனாவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை, 2 இலட்சத்து 70 ஆயிரமாகும். இது, 2010ம் ஆண்டில் இருந்ததை விட, 19 விழுக்காடு அதிகமாகும். மொத்த சுற்றுலா வருமானம், 970 கோடி யுவானைத் தாண்டியது. இது, 2010ம் ஆண்டில் இருந்ததை விட, 36 விழுக்காடு அதிகமாகும்.