"2012 இன்பமான திபெத் பயணம்" என்பது, இவ்வாண்டு திபெத் சுற்றுலாத் துறையின் பரப்புரை தலைப்பாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுற்றுலா அலுவலகத்திலிருந்து இத்தகவல் கிடைத்தது.
திபெத் சுற்றுலா அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி Ciren Dunzhu பேசுகையில், திபெத் பீடபூமியில் பயணிகள் பயணம் மேற்கொள்ளும் போது, மனிதருக்கும் இயற்கைக்குமிடை இணக்கமான சகவாழ்வை உணர்ந்து கொள்ளும் வேளையில், அவர்களின் மனதில் அமைதியான உணர்வு ஏற்படும் என்றும், பயணிகளுக்கு திபெத் தரும் மிக பெரிய மதிப்பு இதுவாகும் என்றும் தெரிவித்தார்.