கிராமப்புற நீர் சேமிப்புக் கட்டுமானத்தை மேம்படுத்தும் சிறப்பு நடவடிக்கையை திபெத் தன்னாட்சிப் பிரதேசம் மேற்கொள்ள உள்ளது. இந்நடவடிக்கை பொது மக்களின் நீர் சேமிப்புப் பிரச்சினை தொடர்பான கவலைகளுக்குத் தூர்வு அளிக்கும். சுமார் 3 ஆண்டுக் காலத்தில், ஆயிரம் கோடி யுவான் செலவில் இந்நடவடிக்கை செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற குடிநீர்ப் பாதுகாப்புத் திட்டப்பணி, மின்னாற்றல் இல்லாத பிரதேசங்களில் கிராமப்புற நீர் மின்னாற்றல் கட்டுமானப் பணி, சிறிய அளவிலான நீர்ப்பாசன மற்றும் நீர் துப்புரவுப் பணி, நடுத்தர முற்றும் சிறிய அறுகளைக் கட்டுப்படுத்தும் வெள்ளப் பெருக்குத் தடுப்புப் பணி ஆகிய 4 நீர் சேமிப்புப் பணிகள் செயல்படுத்தப்படும்.