அடுத்த சில ஆண்டுகளில், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள தொல் பொருட்களுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்புத் திட்டப்பணிக்கு 170 கோடி யுவான் ஒதுக்கீடு செய்யப்படும் என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத் தொல் பொருள் நிறுவனத்தின் தலைவர் சாங்போ மார்ச் முதல் நாள் லாசா நகரில் கூறினார்.
திபெத்தின் தொல் பொருட்களுக்கான புதிய சுற்றுப் பராமரிப்புத் திட்டப்பணி கடந்த ஆண்டு அக்டோபர் திங்களில் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது. 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை, சமகால மற்றும் தற்கால வரலாற்றுச் சிதிலங்கள், சிறப்புமிக்க கட்டிடங்கள் மற்றும் தொல் பொருட்களுக்கான பாதுகாப்பு வசதிகளை உருவாக்கும் ஆக்கப்பணி முதலிய 44 நிகழ்ச்சிகளைத் திபெத்தின் முக்கியத் தொல் பொருட்களுக்கான பாதுகாப்பு திட்டப்பணி கொண்டிருக்கும் என்றும் சாங்போ தெரிவித்தார்.
சீனாவில் செழுமையான தொல் பொருட்களைக் கொண்டிருக்கும் இடங்களில் ஒன்றாகத் திபெத் விளங்குகிறது. தற்போது, திபெதிதில் 4 ஆயிரத்து 300 நிலையான தொல் பொருட்கள் அமைத்திருக்கும் இடங்கள் இருக்கின்றன.