• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நிதானமான திபெத் நிலைமை
  2012-03-08 15:54:15  cri எழுத்தின் அளவு:  A A A   

திபெத்தில் தீக்குளித்தல் சம்பவம் தற்போது இல்லை. பொதுவாக, திபெத் நிலைமை, நிதானமாக இருக்கின்றது என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைவர் bai ma chi lin 7ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார். தேசிய இன ஒற்றுமை, திபெத்திலுள்ள பல்வேறு தேசிய இன மக்களின் உயிர் நாடியாகும். நிதான வாழ்க்கையை மக்கள் விரும்புகின்றனர். மக்கள், இன்பமான வாழ்க்கையை விரும்பி பேணிமதித்து பாதுகாப்பது உறுதி என்றும் அவர் கூறினார்.

பெய்ஜிங்கில் நடைபெறுகின்ற சீனாவின் 11வது தேசிய மக்கள் பேரவையின் 5வது கூட்டத் தொடரில் சீன மற்றும் வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் சிறந்த கவனம் செலுத்துகின்றன. 7ம் நாள் பிற்பகல் மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்ற திபெத் பிரதிநிதிக் குழுவின் கூட்டம், 140க்கு மேலான சீன மற்றும் வெளிநாட்டு செய்தி ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கின்றது. திபெத்தில் நிகழ்ந்த தீக்குளித்தல் சம்பவம் மற்றும் திபெத்தின் நிதானம் குறித்து திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைவர் bai ma chi lin எடுத்துக்கூறினார். திபெத்தில் தீக்குளித்தல் சம்பவம் தற்போது நிகழவில்லை. பொது மக்கள் அமைதியாக வாழ்கின்றனர் என்று அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது

கடந்த ஆண்டு, குழந்தைகள் பள்ளியில் சேரும் விகிதம், 98 விழுக்காட்டை எட்டியது. மழலையர் பள்ளியிலிருந்து மேனிலை பள்ளிக் கல்வி வரையான 15 ஆண்டுகளில், கட்டாய கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு, 23 ஆயிரம் திபெத் மக்கள், வேலை வாய்ப்புகளைப் பெற்றனர். நகர மற்றும் கிராமப்புறங்களில் பதிவுச் செய்யப்பட்ட வேலையற்றோர் விகிதம், 3.2 விழுக்காட்டுக்குள் இருக்கிறது. திபெத் பட்டதாரி மாணவர்கள், அனைவரும் வேலை வாய்ப்புகள் பெற்றுள்ளனர். விலைவாசி உயர்வது குறித்து, பேசுகையில் வாழ்க்கை மானியங்களைத் திபெத் அரசு உடனடியாக விநியோகிக்கிறது. மொத்தம், சுமார் 10 கோடி யுவான் வழங்கப்பட்டது. எனவே, மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. இதைத் தவிர, திபெத் மக்கள் முதுமைக் கால காப்புறுதி அமைப்பு முறை, திபெத்தில் முழுமையாக பரவல் செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.

இவ்வாண்டு பணி குறித்து, குறிப்பிடுகையில் திபெத் பிரதேசத் தனிச்சிறப்பின் படி, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை திபெத் மேம்படுத்தும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040