வேளாண்மை, கிராமம் மற்றும் விவசாயிகள் தொடர்பான பணிகளுக்குச் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகின்றது. திபெத்தில் வேளாண் மற்றும் மேய்ச்சல் பிரதேசத்தின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தி விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வருமானம் தொடர்ந்து நிதானமாக அதிகரிப்பதை உத்தரவாதம் செய்யும் வகையில், திபெத் நிதி ஒதுக்கீட்டைப் பெரிதும் அதிகரித்துள்ளது.
இவ்வாண்டு, வேளாண் துறையில் திபெத் மொத்தமாக 800கோடி யுவானை ஒதுக்கும். அது 2011ஆம் ஆண்டில் இருந்ததை விட, 68 விழுக்காடு அதிகமாகும். மேலும் சுமார் 60ஆயிரம் குடும்பங்களின் குடியிருப்புப் பிரதேசக் கட்டுமானத்துக்கென திபெத் 92கோடியே 90லட்சம் யுவானை ஒதுக்கும்.