• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பல்வேறு தரப்புகளின் ஒத்தக் கருத்துக்களைத் திரட்டச் சீனா விருப்பம்
  2012-03-08 18:44:22  cri எழுத்தின் அளவு:  A A A   
அணு பாதுகாப்பு உச்சிமாநாட்டிலும் பிரிக்ஸ் நாடுகள் உச்சிமாநாட்டிலும் சீனத் தலைவர்கள் கலந்து கொள்வர். இவ்விரண்டு உச்சிமாநாடுகள், பல்வேறு தரப்புகளின் ஒத்தக் கருத்துக்களை மேலும் ஒன்று திரட்ட வேண்டுமென சீனா விரும்புவதாக, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லியு வெய் மின் 8ம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில் தெரிவித்தார்.

பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களின் 4வது உச்சி மாநாடு தொடர்பாக அவர் பேசுகையில், இந்த உச்சிமாநாட்டுக்கான ஆயத்தப் பணிகளுக்கு இந்தியா ஆற்றியுள்ள ஆக்கப்பூர்வமான பங்கைச் சீனா பாராட்டுகிறது. இந்தியத் தரப்புடனும், பிரிக்ஸ் நாடுகளின் பல்வேறு தரப்புகளுடனும் ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தச் சீனா விரும்புகிறது என்று அவர் கூறினார்.

இந்த உச்சிமாநாட்டின் மூலம், சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்களில் சீன-இந்திய ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தி, இப்பிரதேசத்திலும் மேலும் விரிவான அளவிலும் அமைதி, நிதானம், செழுமையை முன்னேற்றச் சீனா விரும்புகிறது என்றும் லியு வெய் மின் கூறினார்.

2வது அணு பாதுகாப்பு உச்சிமாநாடு, மார்ச் திங்கள் இறுதியில் தென் கொரியாவின் தலைநகரான சியோல் நகரில் நடைபெறும். பிரிக்ஸ் நாடுகளின் 4வது உச்சிமாநாடு மார்ச் திங்கள் இறுதியில் புது தில்லியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040