மேன்மேலும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் திபெத்திற்கு வந்து தங்கினால், அங்கு உயிரினச் சுற்றுச்சூழல் வன்மையான அழுத்தத்திற்கு உள்ளாகும். திபெத்தின் சுற்றுச்சூழலைப் பேணிகாக்க, 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை, திபெத்தில் பசுமையான, கரி குறைந்த சுற்றுலா மேற்கொள்ளுமாறு, திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசு ஆக்கமுடன் வேண்டுகோள்கிறது திபெத் சுற்றுலாப் பணியகத்திலிருந்து கிடைத்த தகவல் இதைக் கூறுகிறது.
தற்போது, திபெதின் நீர், காற்று, ஒலி, மண், கதிரியக்கம், உயிரினச் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் தரம், நல்ல நிலையில் இருக்கின்றது. மிகப் பெரும்பாலான ஏரிகள் மனிதர்களின் புழக்கத்தால் பாதிக்கப்படாமல் இன்னும் சீராதவுள்ளன என்று சுற்றுலாப் பணியகத்தின் ஆய்வு அறிக்கை ஒன்று கூறியுள்ளது.