• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வங்கிக் கையிருப்புத் தொகை விகிதம்
  2012-03-12 12:42:18  cri எழுத்தின் அளவு:  A A A   

பொதுவாகக் கூறின், வங்கியின் கையிருப்புத் தொகை விகிதத்தைச் சரிப்படுத்துவதற்குக் காரணம் சந்தையின் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகும் என்று சீன மத்திய வங்கியான சீன மக்கள் வங்கியின் தலைவர் சோன்சியாவ்ச்சூவேன் மார்ச் 12ஆம் நாள் தெரிவித்தார். வங்கிக் கையிருப்புத் தொகை விகிதத்தின் சீரமைப்பு நாட்டின் நாணயக் கொள்கை நிலைமையைப் பிரதிநிதித்துவப்படுத்தாது. சீனாவின் 11வது தேசிய மக்கள் பேரவையின் 5வது கூட்டத்தொடரின் செய்தியாளர் கூட்டத்தில் சோன்சியாவ்ச்சூவேன் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த போது இவ்வாறு தெரிவித்தார்.

சந்தைப் புழக்கத்தின் நிலைமையின் படி, கையிருப்புத் தொகை விகிதம் அமைய வேண்டும். சந்தைப் புழக்கத்தின் நிலைமை நாட்டின் அன்னியச் செலாவணி மற்றும் சர்வதேச வரவு செலவின் சம நிலையால் பாதிக்கப்படுகின்றது. நாணயக் கொள்கைக்கு சீன மத்திய வங்கி எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகின்றது என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040