• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் வறுமை ஒழிப்பு லட்சியம்
  2012-03-13 12:35:13  cri எழுத்தின் அளவு:  A A A   
வறுமை ஒழிப்புக்கான வரையறையை, 2010ஆம் ஆண்டு விவசாயிகளின் நபர்வாரி நிகர வருமானமான 1274 யுவானிலிருந்து 2300 யுவானாக உயர்த்துவதென, 2011ஆம் ஆண்டின் இறுதியில் நடைபெற்ற சீன நடுவண் அரசின் வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சிப் பணிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. புதிய வரையறையின் வெளியீடு, சீனாவின் வறுமை ஒழிப்பு லட்சியம் புதிய கட்டத்தில் நுழைந்துள்ளதைக் காட்டுகிறது. வறுமை ஒழிப்புப் பணியை சீனா தொடர்ந்து வலுப்படுத்தி, முழு உலகத்தின் வறுமை ஒழிப்பு லட்சியத்தை முன்னேற்றும் என்பதையும் இது வெளிப்படுத்துகிறது.

சீன அரசவையின் வறுமை ஒழிப்புப் பணியகத்தின் தலைவர் ஃபான்சியாவ்ஜியன் இது தொடர்பாக எமது செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில் கூறியதாவது—

"இந்த வரையறையின் உயர்வு, நமது வறுமை ஒழிப்பு லட்சியம் புதிய கட்டத்தில் நுழைந்துள்ளதைக் காட்டுகிறது. முந்தைய வறுமை ஒழிப்புப் பணியில் காணப்பட்ட மாபெரும் சாதனைக்கான அடையாளமாகவும் இது அமைகிறது. விவசாயிகளின் உணவு உடைப் பிரச்சினையை அடிப்படையில் தீர்த்துள்ளோம். இந்த அடிப்படையில் தான், வறுமை ஒழிப்புக்கான வரையறையை பெருமளவில் உயர்த்த வேண்டும் என முன்வைத்துள்ளோம்" என்று அவர் கூறினார்.

சர்வதேச கொள்வனவு ஆற்றலை மதிப்பிடும் முறையின்படி, வறுமையான பகுதி மற்றும் வறிய மக்களுக்கு சீன அரசு மேலும் பெரும் ஆதரவளிக்கும் என்பதை இந்த புதிய வரையறை காட்டுகிறது என்றும் ஃபான்சியாவ்ஜியன் குறிப்பிட்டார்.

வறுமை ஒழிப்புக்கான புதிய வரையறைக்கிணங்க, கிராமப்புற வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சிக்கான புதிய பணித்திட்டத்தைச் செயல்படுத்தி, தொடர்பான பணிகளை பன்முகங்களிலும் செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என்று சீனத் தலைமை அமைச்சர் வென்ச்சியாபாவ் இவ்வாண்டின் அரசுப் பணியறிக்கையில் வலியுறுத்தினார்.

இது குறித்து பேசுகையில், எதிர்வரும் 10 ஆண்டுகளில், இன்னல் மிகுந்த பிரதேசங்கள் முக்கிய பணி இலக்காகவும், உணவு உடைப் பிரச்சினையை சீராகத் தீர்த்து, ஏழை மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டு செல்வமடையச் செய்யும் பணியை விரைவுபடுத்துவது முதல் கடமையாகவும் கொள்ளப்படும் என்று ஃபான்சியாவ்ஜியன் குறிப்பிட்டார்.

கடந்த 30 ஆண்டுகளில் வறுமை ஒழி்ப்பு லட்சியத்தில் மனிதகுலம் பெற்ற சாதனைகளில் மூன்றில் இரண்டு பங்கு சீனாவைச் சார்ந்தவை என்று ஐ.நா. மற்றும் உலக வங்கியின் அறிக்கை காட்டுகிறது.

எதிர்காலப் பணி இலக்கு பற்றிக் குறிப்பிடுகையில், ஃபான்சியாவ்ஜியன் நம்பிக்கையுடன் கூறியதாவது—

"உணவு உடைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் காணப்பட்ட சாதனையின் அடிப்படையில், ஏழை மக்களை வறுமையிலிருந்து விடுபட்டு செல்வமடையச் செய்யும் பணியை சீனா விரைவுபடுத்தி, வளர்ச்சித் திறனை உயர்த்தி, வளர்ச்சி இடைவெளியைக் குறைக்கும். உலகின் வறுமை ஒழிப்பு லட்சியத்துக்கு உகந்த பங்காற்றியுள்ள சீனா தொடர்ந்து அதற்கென பாடுபடும்" என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040