இவ்வாண்டு, சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் புத்த குருமார்கள், நகர குடிமக்களுக்கான சமூக முதுமைக் கால காப்புறுதியிலும், நகர வாசிகள் அனுபவிக்கும் அடிப்படை மருத்துவக் காப்புறுதியிலும் சேர முடியும். இவ்வாறு அவர்களின் அடிப்படை வாழ்க்கைக் காப்புறுதி அமைப்பு முறையின் பரவுகின்ற பரவல் அளவு விரிவாக்கப்பட்டது. சமூகக் காப்புறுதியில் சேர்வதன் மூலம், புத்த குருமார்களின் உண்மை இன்னல்கள் தீர்க்கப்படும்.
18 வயதுக்கு மேலான புத்த குருமார்கள், தங்கள் குடிமக்கள் பதிவின் கட்டுப்பாடின்றி, சொந்த விருப்பத்துடன் தம் கோயில் இருக்கும் இடத்தில் நகர குடிமக்களுக்கான சமூக முதுமைக் கால காப்புறுதியிலும், நகர குடிமக்களுக்கான அடிப்படை மருத்துவக் காப்புறுதியிலும் சேரலாம்.